A KAAPPI STORY.
” Is this kaappi or kazhuneer ? ” She protested.
Kaappi is for drinking, you know and kazhineer to be thrown; you know that too.
“I can’t make better kaappi; if you want, you drink or get lost ” He replied. He could reply so, as he was her husband.
She picked up her bag, exited shouting, “OK, I am going to my mom”. She could do so, as she was his wife and had a mom.
He didn’t shake, but the earth did. The coffee cup slipped on the floor and broke into pieces.
She returned in the evening. Her father behind, her bag on his head.
The earth smiled ; the moon too smiled.
” Clean the floor ,it was your mistake,” he asked her, when the earth and moon stopped smiling.
“It was your kaappi and you should clean it ” She protested
.
“OK, I will mop the floor, you remove the glass pieces”. He was ready for a compromise.
.” No, you should do both as you made the kaappi. ” She had a point.
“I made it for you and you kept it on the table ” He argued, “so , you should do the cleaning”. He too had a point.
” No, I will do the cleaning” The old man volunteered, as he was an old man
.
”Nothing doing uncle. She should do it .” The young man protested , as he was an young man.

” I am not a servant; I am going. ” The young lady got up but the old man didn’t.
” I will stay back”; said the old man, ” this boy needs a servant”
The earth didn’t shake and the moon didn’t smile. “I will make kaappi” said the old man.”
” No uncle, we will go to Rama cafe.” replied his son in law.
They went to Rama cafe. There they found the young lady and her mom enjoying kaappi. They all enjoyed kaappi together.
At the cash table,gazing the bill at her husband’s hand, the young lady enquired, “how much ?”
‘Two hundred” replied he and paid the bill.
50 Rs for a kaappi ? ” She exclaimed and looked at the owner unbelievably.
‘This is not kaappi, this is coffee, madam” replied he.
The young lady held the young man’s hand firmly and said softly but firmly,”nadavunko, aathuukku”. They went back home and lived happily.
The elder lady too said the same but without holding her husband’s hand , returned home and lived happily.
Then on, The Earth didn’t shake.Ocala, Florida,
Nov 9, 2012
_______________________________________________________________
Tamiz translation by Rajamani
ஒரு காப்பியின்கதை.
“இது காப்பியா அல்லது கழுனீரா?” அவள் கடிந்துகொண்டாள்.
காப்பியை குடிப்பர்கள், கழுனீரை கொட்டுவார்கள் உனக்கும் அது தெரியுமே!.
“நான் இதைவிட நன்றாக காப்பி போட முடியாது; நீ வெணும்னா, குடி இல்லேன்னா தொலைந்து போ” அவன் பதிலளித்தான். அவன் கணவன் என்பதால், அப்படி பதில் சொல்ல முடியும்.
அவள் “சரி, நான் என் அம்மாவிடம் போகிறேன்”, என்று கத்திவிட்டு வெளியேறி, தன் பெட்டியை எடுத்துக்கொண்டாள். அவள் மனைவி என்பதாலும் அவளுக்கு ஒரு அம்மா இருப்பதாலும் அவ்வாறு செய்ய முடியும்.
அவன் ஒன்றும் அதிர்ச்சி அடையவில்லை, ஆனால் பூமி அதிர்ந்தது. ஆம்., காபி கப் அவள் கையிலிருந்து “வழுக்கி” தரையில் விழுந்து துண்டுகளாக உடைந்து சிதறியதனால்!.
அவள் மாலையில் வீடு திரும்பினாள். அவள் பின்னாலேயே அவள் தந்தை, அவள் பெட்டியை தன் தலையில் சுமந்துகொண்டு வந்தார்!.
பூமி சிரித்தது; நிலவும் சிரித்தது.
பூமியும் நிலவும் சிரித்து நிறுத்திய போது “சுத்தம் செய், அது உன் தப்பு,” அவன், அவளிடம் சொன்னான்.
“இது உங்க காப்பி தானே அதனால் நீங்களேதான் சுத்தம் செய்ய வேண்டும்” அவள் கண்டித்து சொன்னாள்.
“சரி, நான் தரை துடைக்கிறேன், நீ கண்ணாடி துண்டுகளை அகற்று”. அவரன் ஒரு சமரசத்திற்கு தயாரானான்.
.”ரெண்டுமே நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்கள்தானே கப்பி போட்டீங்க” அவள் சொன்னதும் சரியாகத்தான் இருந்தது.
” உனக்காகத்தானே நான் கப்பி போட்டு மேஜை மீது வைத்தேன், அதனால் நீயேதான் சுத்தம் செய்ய வேண்டும்”, அவன் வாதிட்டான் “. அவன் சொல்வதும்கூட சரியாகத்தான் இருந்தது.
“சரி நானே செய்யறேன்” யென்று முதியவர் புறப்பட்டார்.
” ஒன்றும் வேண்டாம் மாமா அவள்தான் செய்ய வேண்டும். “அவன் ஒரு வாலிபன் என்பதால் அந்த இளம் பெண்ணிடம், ஆர்ப்பாட்டம் செய்துவிட துணிந்தான்.
“நான் ஒண்ணும் வேலைக்காரி அல்ல;. நான் போகிறேன்” இளம் பெண் எழுந்தாள். ஆனால் முதியவர் எழவில்லை.
“நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்”; முதியவர் சொன்னார். “இந்த வாலிபனுக்கு ஒரு வேலைக்காரன் தேவை”
பூமியில் அதிர்வில்லை நிலவும் சிரிக்கவில்லை.. “நான் காப்பி போடத்தெரிந்தவன்” முதியவர் கூறினார்.
“இல்லை மாமா, நாம் ராமா கஃபே போகலாம்.” மருமகன் பதிலளித்தார்.
அவர்கள் ராமா கஃபே சென்றார்கள்
அங்கு அம்மாவும் பொண்ணுமாக கப்பி அருந்தி ருசித்துக்கொண்டிருந்த்தை அவர்கள் பார்த்தனர், எல்லோருமாக சேர்ந்து காப்பி ருசித்து மகிழ்ந்தனர்.
கல்லாவை நெருங்கியதும், தன் கணவன் கையில் இருந்த பில்லை நோக்கிக்கொண்டே “எவ்வளவு?”, என்றாள் அந்த இளம் பெண்.
‘இரு நூறு “என்று அவன் பதிலளித்துக்கொண்டே பில்லுக்கு பணமும் செலுத்தினான்.
ஒரு காப்பி 50 ரூபாயா? “அவள் கூச்சலிட்டுக்கொண்டே கஃபேயின் உரிமையாளரை அவநம்பிக்கையோடு பார்த்தாள்.
“இது காப்பி அல்ல, காஃப்ஃபீ (coffee), மேடம்” என்று அவர் பதிலளித்தார்.
அவள் இறுக்கமாக அவன் கையைபிடித்துக்கொண்டு, மெதுவாக ஆனால் உறுதியாக ”நடந்துவிடலாம் வீட்டிற்க்கு” என்றாள்.
அவர்கள் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
மூதாட்டியும்கூட கூட அதேபோல் கூறினார். ஆனால் அவரது கணவர் கையை பிடித்துக்கொளாமலேயே வீட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
அதன் பிறகு என்றுமே பூமியில் அதிர்ச்சி ஏற்ப்படவில்லை!
கவனிக்கவும்:
ஒரு நண்பர் என்னிடம் ரமா கஃஃபேயில் ஒரு காப்பியின் விலை ரூ 20 அல்லது 25 மட்டுமே இருக்கலாம் என்று சுட்டிக்கட்டினார். அது சரியென்று தான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் அந்த வாலிபன் தன் மனைவியிடம் பொய்த்திருக்க்கூடும். கணவன்மார்கள் அப்படி செய்வதும் உண்டு. அவளும் சமர்த்திசாலியாகத்தான் பில்லை காட்டும்படி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவளையே பணம் கொடுக்க சொல்லியிருப்பானே !
ஆங்கில கதாசிரியர்: ————————————————-தமிழாக்கம்: ராஜாமணி
இணையதளத்தின்மூலம் அனுமதி பெற்றபின் பிரசுரத்திற்க்கு அனுப்ப படுகிறது!
Sivasubramanian Perinkulam email: [email protected] Blog : perinkulams.wordpress.com
P.Gopalan, C-14 Nildih Road, Golmouri P.O., Jamshedpur- 831003 [email protected]